Sunday, July 3, 2022

21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் 21st Century Skills

Name - A.K.M. Fawsan

Reg.No - BM21T00010

 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள்

21st Century Skills

21ம் நூற்றாண்டின் திறன்கள் என்பது தற்போதைய யுகத்தில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற அவர்கள் கொண்டிருக்க வேண்டிய  திறன்கள் ஆகும்

21 ஆம் நூற்றாண்டின் திறன்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. விமர்சன சிந்தனை Critical thinking

2. படைப்பாற்றல் Creativity

3. இணைந்து பணியாற்றல் Collaboration

4. தொடர்பாடல் Communication

5. தகவல் தொடர்பாடல் அறிவு Information literacy

6. ஊடக அறிவு Media literacy

7. தொழில்நுட்ப அறிவு Technology literacy

8.நெகிழ்வுத் தன்மை Flexibility

9. தலைமைத்துவம் Leadership

10. தன்னார்வ முயற்சி Initiative

11. உற்பத்தி திறன் Productivity

12. சமூகத் திறன்கள் Social skills

 

இந்தத் திறன்கள் இன்றைய நவீன கால சந்தையின் தேவைகளை நிறைவேற்றக்கூடியனவாக காணப்படுகின்றன.

21 ஆம் நூற்றாண்டின் திறன்களை மூன்று வகையாக வகைப்படுத்தலாம்  

1.கற்றல் திறன்கள்

2. எழுத்தறிவுத் திறன்கள்

3. வாழ்க்கைத் திறன்கள்


கற்றல் திறன்கள் Learning Skills

நவீன பணிச்சுழலுக்கு ஏற்ற விதத்தில் தம்மை உருவாக்கிக் கொள்ள தேவையான திறன்களை இதன்மூலம் கற்பிக்கப்படுகின்றது.



எழுத்தறிவுத் திறன்கள் Literacy Skills

தகவல்களை எவ்வாறு பிரித்தறிந்து கொள்வது, தகவல்களை வெளியிடும் நிறுவனங்கள், அவற்றின் பின்னணியில் உள்ள தொழில்நுட்பங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட திறன்கள் ஆகும். அதாவது இணையத்தளங்களிலே வரக்கூடிய தகவல்களின் உண்மைத் தன்மையை கண்டறிவது அதேபோன்று தகவல் வழங்கும் வளங்களின் நம்பகத்தன்மையை பிரித்தறிந்து கொள்வது ஆகும்.





வாழ்க்கைத் திறன்கள் Life Skills

வாழ்க்கையின் தேவைகள் மற்றும் சவால்களுக்கு சரியான முறையில் முகம் கொடுக்கக்கூடிய திறன்களை குறிப்பிடுகின்றது. இதனை சமூக உளவியல் தேர்ச்சிகள் எனவும் அழைக்கலாம்.



ஒவ்வொரு திறன்களையும் விரிவாக பார்ப்போமானால்

கற்றல் திறன்கள் Learning Skills (the four C's)

21 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான திறன்களாக இவை காணப்படுகின்றன.


விமர்சன சிந்தனை Critical thinking

பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறிதலை இது குறிப்பிடுகின்றது. ஓர் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு விமர்சன சிந்தனை மிகவும் அவசியமான ஒன்றாகும். இது பிரச்சனைகளை களையெடுக்கும் மற்றும் பயனுள்ள முயற்சிகளால் அவற்றை மாற்றும் வழிமுறையாகும்.

படைப்பாற்றல் Creativity

குறிப்பிட்ட வரையறைக்கு வெளியே சிந்தித்தல் ஆகும். இத்திறனானது ஒரு எண்ணக்கருவை பல்வேறு வழிகளில் நோக்கக்கூடிய வகையில் மாணவர்களை பலப்படுத்துகின்றது. இதனால் புத்தாக்க சிந்தனை மாணவர்களிடத்தில் ஏற்படுகின்றது.

இணைந்து பணியாற்றல் Collaboration

மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுதல் ஆகும். இது மாணவர்களை ஒன்றிணைந்து செயல்படவைப்பது, சமரசங்களை அடைவது மற்றும் சாத்தியமான தீர்வுகளை பெற்றுக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்தலைக் குறிப்பிடலாம். 


தொடர்பாடல் Communication

மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல் ஆகும். இது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட அனைத்துக் கற்றல் திறன்களின் பண்புகளை ஒன்றிணைப்பதாக காணப்படுகின்றது. எந்த ஒரு நிறுவனத்திற்கும் இலாபத்தை பெற்றுக்கொள்ள தொடர்பாடல் மிக முக்கியமாகும். வெவ்வேறு வித்தியாசமான ஆளுமை வகைகளுக்கு மத்தியில் கருத்துக்களை பரிமாறுவதற்கு இந்தத் திறன் மாணவர்களுக்கு உதவுகின்றது.

எழுத்தறிவு திறன்கள் Literacy Skills (IMT)

இவை ஒவ்வொன்றும் எண்முறை (Digital) புரிதலின் கூறுகளுடன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றது.

தகவல் எழுத்தறிவு Information literacy

இது தகவல்கள், புள்ளிவிபரங்கள், பகுப்பாய்வுகள், உண்மைகள் மற்றும் தரவுகளை புரிந்து கொள்வதாகும். இது மாணவர்களுக்கு கற்பனை கதைகளில் இருந்து உண்மைகளை எவ்வாறு பிரித்தறிந்து கொள்வது என்பதனை கற்பிக்கின்றது.

ஊடக எழுத்தறிவு Media literacy

தகவல்கள் வெளியிடப்படும் முறைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான அறிவினை பெற்றுக் கொள்வது ஆகும். ஊடக எழுத்தறிவு என்பது நம்பகமான மற்றும் நம்பகமற்ற வெளியீட்டு முறைகள், வெளியீட்டு மையங்கள், வளங்கள் ஆகியவற்றை கண்டறிதல் ஆகும்.

தொழில்நுட்ப எழுத்தறிவு Technology literacy

தகவல் யுகத்தை சாத்தியமாக்கக்கூடிய தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான அறிவு ஆகும். தகவல் யுகத்தில் தொடர்புபட்டுள்ள தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பாக மேலும் ஒரு படி மேலே சென்று கற்பித்தலை குறிக்கின்றது.

தொழில் நுட்ப சாதனங்கள் எவ்வாறு இயங்குகின்றது, அதனுடைய இலக்குகள் என்ன, ஏன் இயங்குகின்றது போன்ற அடிப்படைத் தகவல்களை விளங்கிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை தொழில்நுட்ப எழுத்தறிவு வழங்குகின்றது.

இதன் விளைவாக இவ்வுலகை திறம்பட மாற்றி அமைக்க மாணவர்களுக்கு முடியுமாகின்றது இந்த பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர்களாக மாணவர்கள் மாறுகின்றனர்.


வாழ்க்கைத் திறன்கள் Life Skills (FLIPS)

இந்தத் திறன்கள் அனைத்தும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடா்ழபுபட்டது ஆகும். ஆனால் அவை தொழில்முறை அமைப்புகளிலும் தாக்கம் செலுத்துகின்றன.

நெகிழ்வுத்தன்மை Flexibility

மாறி வரும் நிலைமைகளுக்கு ஏற்ப ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ளக் கூடிய இயலுமையை  குறிக்கின்றது. இது மாணவர்களுக்கு கற்றுக் கொள்வதற்கு சவாலான ஒரு பண்பாக காணப்படுகின்றது. ஏனென்றால் இது இரண்டு சவாலான யோசனைகளின் அடிப்படையில் காணப்படுவதால் ஆகும். அவையாவன,

1. உங்கள் வழி எப்போதும் சரியான சிறந்த வழி அல்ல

2. நீங்கள் தவறிழைக்கும் போது அதனை அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு மாணவனின் வாழ்க்கையின் வெற்றிக்கு நெகிழ்வுத்தன்மை முக்கியமானது ஆகும். இது எப்பொழுது மாற வேண்டும், எப்படி மாற வேண்டும், மாற்றத்துக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் எனும் திறன்களை வழங்குகின்றது.


தலைமைத்துவம் Leadership

ஒரு இலக்கை அடைந்து கொள்வதற்கு ஒரு குழுவை வழிநடத்துதல் ஆகும். அதாவது இலக்குகளை அமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மூலம் ஒரு குழுவை வழிநடத்துவது இலக்குகளை குழுவாக அடைந்து கொள்வதும் ஆகும். புதிய ஊழியர்களுக்கும் பல காரணங்களுக்காக தலைமைத்துவத் திறன்கள் தேவையாகும். முகாமையாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளை புரிந்து கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது என்பது முக்கியமானது.

பின்னர் இவ்வூழியர்கள் பதவி உயர்வு பெற்று முகாமைத்துவப் பணிகளில் ஈடுபடும் போது அவர்கள் பெற்றுக்கொண்ட தலைமைத்துவத் திறன்களைப் பயன்படுத்தலாம்.

தன்னார்வ முயற்சி Initiative

சொந்தமாக உத்திகளைப் பயன்படுத்தி திட்டங்களை தொடங்குதல் தன்னார்வ முயற்சி எனப்படுகின்றது.

உண்மையான வெற்றிக்கு தன்னார்வ முயற்சி தேவைப்படுகின்றது. இதற்கு மாணவர்கள் சுயமாக தொடங்குபவர்களாக காணப்பட வேண்டும். தன்னார்வ முயற்சியானது ஒரு சிலருக்கு மட்டுமே இயல்பாக வரும். எனவே மாணவர்கள் முழுமையாக வெற்றியை அடைந்து கொள்வதற்கு அதனை கற்றுக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்வதற்கு மிகவும் கடினமான திறன்களில் இதுவும் ஒன்றாகும். தன்னார்வ முயற்சி என்பது வழமையான வேலை நேரத்துக்கு மேலதிகமாக வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதை குறிக்கிறது.


உற்பத்தி திறன் Productivity

உற்பத்தித்திறன் என்பது ஒரு மாணவனின் வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க கூடிய திறனை குறிப்பிடுகிறது. வணிக அடிப்படையில் இது செயல்திறன் என அழைக்கப்படுகின்றது. எந்த ஒரு ஊழியறதும் பொது இலக்கு குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செய்வதாகும். ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள உற்பத்தித்திறன் செயலுபாயங்களை  அறிந்து செயல்படுவதன் மூலம் மாணவர்கள் தான் சிறப்பாக செயற்பட தேவையான வழிகளை கண்டறிகின்றனர்.


சமூகத் திறன்கள் Social skills 

பரஸ்பர நன்மை கருதி ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பை இது குறிக்கின்றது. இது ஒருவர் தன்னைச் சூழவுள்ள ஏனையோருடன் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பாகும். சரியான சமூகத் திறன்கள் நீண்ட கால உறவுகளை ஏற்படுத்துவதற்கு சிறந்த கருவிகளாக அமைகின்றன. சமூக வலைத்தளங்களின் அறிமுகம் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் அறிமுகம் மனிதர்களின் இடைத்தொடர்பு அமைப்பை மாற்றம் பெறச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

4வது கைத்தொழில் புரட்சி 4th Industrial Revolution

Name - A.K.M. Fawsan Reg.No. - BM21T00010 4வது கைத்தொழில் புரட்சி  4th Industrial Revolution உலகில் தொழில் துறையானது குறிப்பிட்ட கால இடைவெள...