Sunday, July 3, 2022

4வது கைத்தொழில் புரட்சி 4th Industrial Revolution

Name - A.K.M. Fawsan

Reg.No. - BM21T00010

4வது கைத்தொழில் புரட்சி 

4th Industrial Revolution

உலகில் தொழில் துறையானது குறிப்பிட்ட கால இடைவெளியில் முன்னேற்றங்களை சந்தித்து வருகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டில் நீராவி நீர் சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி இயந்திரங்கள் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதுவே முதலாவது தொழில் புரட்சி ஆகும். இரண்டாவது தொழில் புரட்சி 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடைபெற்றது. இந்தக் காலத்தில் மின்சாரம், தந்திச் சேவை போன்றன அறிமுகப்படுத்தப்பட்டன. மின்சாரத்தின் மூலமான உற்பத்திகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தன. அடுத்ததாக மூன்றாவது தொழில் புரட்சி டிஜிட்டல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதுடன் ஆரம்பமானது. இந்தப் புரட்சியின் அடிப்படை கணினியாகும். பின்னாலில் வந்த தகவல் தொழில்நுட்பம் மூன்றாவது தொழில் புரட்சியை புதிய பரிணாமத்திற்கு கொண்டு சென்றது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நான்காவது தொழிற்புரட்சி என்பது ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். உற்பத்தியை தான் இயங்கி தன்மை கொண்டதாக மாற்றுவது தான் இதன் நோக்கமாகும்.



செயற்கை நுண்ணறிவு,  இணையத்தை அடிப்படையாகக் கொண்ட தளங்கள், ஸ்மார்ட் சென்சஸ், பெருந்தரவு, ரோபோட்டிக்ஸ், மரபணு பொறியியல் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற பலவற்றின் முன்னேற்றங்களின் கலவையாகும். நான்காம் தொழிற்புரட்சி நமது வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைக்கப் போகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும். நவீன வாழ்க்கைக்கு விரைவாக இன்றியமையாததாக ஆகிவரும் பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பின்னால் உள்ள கூட்டு சக்தி இதுவாகும். 

இன்றைய முன்னேற்றங்களை ஒரு புதிய புரட்சி என்று முத்திரை குத்தியவர் உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனர் கிளாஸ் (Klaus Schwab) ஆவார். 2016 ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் அவர் அதற்கு முந்திய புரட்சிகளைப் போலவே நான்காவது தொழில் புரட்சியானது உலகளாவிய வருமான நிலைகளை உயர்த்தும் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் எதிர்காலத்தில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் செயல் திறன் மற்றும் உற்பத்தி திறனில் நீண்ட கால பயனுடையனவாகவும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு செலவுகள் குறையும், உலகளாவிய விநியோக சங்கிலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வர்த்தக செலவுகள் குறையும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இவை அனைத்தும் புதிய சந்தைகளைத் திறந்து பொருளாதார வளர்ச்சியை தூண்டும் இருப்பினும் இது அனைத்தும் நல்ல செய்தி அல்ல, குறிப்பாக தொழிலாளர் சந்தைகளை சீர்குலைக்கும் அதேபோன்று அதிக சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.


நான்காவது தொழிற்புரட்சியை புரிந்து கொள்வதற்கான எளிதான வழி அதை இயக்கும் தொழில்நுட்பங்களில் சிலவற்றில் கவனம் செலுத்துவதாகும். அதனுள் பின்வருவன அடங்கும்.



செயற்கை நுண்ணறிவு Artificial Intelligence (AI)

செயற்கை நுண்ணறிவின் மூலம் கணினியானது மனிதர்களைப் போல் சிந்திக்க கூடியது. கணினிகளானது சிக்கலான வடிவங்களை அடையாளம் காணும், தகவலை செயலாக்கம் செய்யும், முடிவுகளை எடுக்கும் மற்றும் பரிந்துரைகளை செய்யும் திறனைக் கொண்டது. செயற்கை நுண்ணறிவு பல வழிகளில் பயன்படுத்தப்படுகின்றது, கட்டமைக்கப்படாத தரவுகளின் பெரிய அளவில் உள்ள வடிவங்களை கண்டறிவதன் மூலம் உங்கள் தொலைபேசியில் தானியங்கு திருத்தத்தை மேற்கொள்வது வரை.


பிளொக்செய்ன் Blockchain

பிளொக்செய்ன் என்பது பாதுகாப்பான பரவலாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான தரவை பதிவு செய்து பகிர்வதற்கான வழியாகும். மூன்றாம் தரப்பு இடைத்தரகர்களில் தங்க வேண்டிய அவசியமில்லை. டிஜிட்டல் நாணயமான பிட்காயின் சிறந்த பிளொக்செயின் பயன்பாடு ஆகும். மேலும் இத்தொழில்நுட்பம் பிற வழிகளிலும் பயன்படுத்தப்படலாம்.  முக்கியமான மருத்துவ தரவை  பாதுகாத்தல் மற்றும் வாக்காளர் மோசடிகளை தடுப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்,


வேகமான கணினி செயலாக்கம் Faster Computer Processing

புதிய  தொழில்நுட்பங்கள் கணினிகளை திறனாக்குகின்றன. அவை கணினிகளை முன்பை விட வேகமாக செயலாற்ற உதவுகின்றன. அதே நேரத்தில் கிளவுட் (Cloud) இன் வருகையால் வணிகங்கள் இணைய அணுகலுடன் எங்கிருந்தும் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக சேமிக்கவும் அணுகவும் அனுமதித்துள்ளன. தற்போது வளர்ச்சியில் உள்ள குவாண்டம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள் இறுதியில் கணினிகளை மில்லியன் கணக்கான மடங்கு சக்தி வாய்ந்ததாக மாற்றும். இந்தக் கணினிகள் செயற்கை நுண்ணறிவை மிகைப்படுத்தி நொடிகளில் மிகவும் சிக்கலான தரவு மாதிரிகளை உருவாக்கி புதிய பொருட்களை கண்டுபிடிப்பதை விரைவுப்படுத்தும் ஆற்றலை கொண்டிருக்கும்.


வா்சுவல் ரியாலிட்டி மற்றும் ஒக்மன்டட் ரியாலிட்டி 

Virtual Reality (VR) and Augmented Reality (AR)

வா்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) உண்மையான உலகத்தை உருவகப்படுத்தும் அதிவேக டிஜிட்டல் அனுபவங்களை வழங்குகின்றது. அதே நேரத்தில் ஒக்மன்டட்  ரியாலிட்டி (Augmented Reality) டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உலகங்களை ஒன்றிணைக்கிறது. உதாரணமாக L'Oreals's மேக்கப் ஆப்ஸ் குறிப்பிடலாம். இது பயனர்கள் மேக்கப் பொருட்களை வாங்குவதற்கு முன் டிஜிட்டல் முறையில் பரிசோதனை செய்ய அனுமதிக்கிறது. மேலும் வீதிக்குறியீடுகள் மற்றும் பிற கட்டுரைகளை ஸ்கேன் செய்து உடனடியாக மொழிபெயர்க்க பயனர்களை அனுமதிக்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட் போன் ஆப்ஸ் ஆகியவை அடங்கும்.


உயிரி தொழில்நுட்பவியல் Biotechnology

உயிரி தொழில்நுட்பமானது செலுலா் மற்றும் உயிர் மூலக்கூறு செயல்முறைகளை பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தயாரிப்புகளை உருவாக்கிறது. இதில் புதிய மருந்துகள் மற்றும் பொருட்களை உருவாக்குதலை குறிப்பிடலாம்.


ரோபோடிக்ஸ் Robotics

ரோபோடிக்ஸ் என்பது தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டிற்காக ரோபோக்களின் வடிவமைப்பு உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றை குறிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ரோபோ உதவியாளர்களை நாம் இன்னும் பார்க்கவில்லை என்றாலும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் ரோபோக்களை பெருகிய முறையில் சிக்கலானதாகவும் அதிநவீனமாகவும் ஆக்கியுள்ளன. உற்பத்தி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதனுக்கு உதவுதல் போன்ற பரந்த அளவிலான துறைகள் அதை பயன்படுத்தப்படுகின்றன.


பொருட்களின் இணையம் The Internet of Things (IoT)

பொருட்களின் இணையம் என்பது அன்றாட பொருட்களை குறிக்கின்றது. ஒருவரின் உடல் நிலையை கண்காணிக்கும் மருத்துவ அணிகலன்கள் வாகனங்கள் மற்றும் பொருள் பொட்டலங்களில் சேர்க்கப்பட்ட கண்காணிப்பு சாதனங்கள் இணையத்துடன் இணைக்கப்படுவதன் மூலம் பிற சாதனங்களால் அடையாளம் காண முடியும்.


3டி பிரிண்ட் 3D Printing

3டி பிரிண்டிங் மூலம் வணிகங்களுக்கு தங்கள் சொந்த பாகங்களை குறைந்த கருவிகளுடன் குறைந்த செலவில் பாரம்பரிய முறைகளை விட வேகமாக அச்சிட முடிகின்றது. மேலும் கூடுதலான வடிவங்களை அவர்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் தயாரித்துக் கொள்ளலாம்.

நான்காவது தொழில் புரட்சியின் நோக்கம் உற்பத்தியை தானியங்கி முறைக்கு மாற்றுவதன் மூலம் உற்பத்திச் செலவை பெருமளவு குறைப்பது ஆகும். உற்பத்தியில் தொழில்நுட்பத்தை பொருத்தும் போது தற்போது உற்பத்தித் துறையில் உள்ள தொழில்நுட்பத்தை பழகிக் கொள்ளாத பணியாளர்கள் வேலையை இழப்பார்கள். அதே நேரத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தில் திறமை பெற்றவர்களுக்கு இப்போது வழங்கப்படுவதை விட பல மடங்கு அதிக ஊதியத்தில் பணி கிடைக்கும். எனவே நான்காவது கைத்தொழில் புரட்சி என்பது எதிர்காலத்தின் முன்னறிவிப்பு அல்ல மாறாக செயலுக்கான அழைப்பாகும்.

No comments:

Post a Comment

4வது கைத்தொழில் புரட்சி 4th Industrial Revolution

Name - A.K.M. Fawsan Reg.No. - BM21T00010 4வது கைத்தொழில் புரட்சி  4th Industrial Revolution உலகில் தொழில் துறையானது குறிப்பிட்ட கால இடைவெள...